பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும் கழகமும் துணை நிற்கும் - உதயநிதி உறுதி

Udhayanidhi Stalin M K Stalin DMK
By Karthick Dec 25, 2023 11:20 AM GMT
Report

மழை வெள்ள பாதிப்புகளை சந்தித்துள்ள மக்களுக்கு அரசும் - கழகமும் நிச்சயம் துணை நிற்கும் என தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மழை வெள்ள பாதிப்பு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற வடதமிழக மாநிலத்தை தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி போன்ற மாவட்டங்களும் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன.

will-stand-with-affected-people-assures-udhay

தமிழக அரசு மீட்புப்பணிகளை துரிதப்படுத்தி, மக்களுக்கான நிவாரணங்களை அளித்து தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகின்றது. இந்நிலையில், நடந்து வரும் நிவாரண பணிகளை குறித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது பதிவிட்டு வருகின்றார்.

நேரில் பாத்துட்டாவது நிவாரணம் கொடுப்பாங்க'னு நம்புவோம் - அமைச்சர் உதயநிதி பேட்டி

நேரில் பாத்துட்டாவது நிவாரணம் கொடுப்பாங்க'னு நம்புவோம் - அமைச்சர் உதயநிதி பேட்டி

துணை நிற்போம்

தற்போது அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், தூத்துக்குடி மாவட்டத்தில் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தொடர் கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, தலா ரூ. 5 லட்சத்திற்கான நிவாரணத் தொகையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வழங்கினோம்.

will-stand-with-affected-people-assures-udhay

அதேபோல, வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்கள் 16 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரத்திற்கான நிவாரணத் தொகை வழங்கினோம். இத்தகைய துயர நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது கழக அரசும் - கழகமும் அனைத்து வகையிலும் துணை நிற்போம் என உறுதி அளித்தோம்.