ஜாமீன் பெறும் செந்தில் பாலாஜி? முன்னுதாரணமாக அமைந்த டெல்லி துணை முதல்வர் வழக்கு!!
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இன்று ஜாமீன் பெற்றுள்ள நிலையில், இது முன்னாள் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கிலும் எதிரொளிக்குமா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
ஜாமீன்
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி இருந்த டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிற்கு அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ - இரண்டு வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் வழங்குவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ம் தேதி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான மணிஷ் சிசோடியாவை, அதே ஆண்டு மார்ச் 9 ம் தேதி பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் ED'யும் கைது செய்திருந்தது. அவர் சுமார் 17 மாதங்களாக சிறையில் இருந்த நிலையில் தற்போது ஜாமீன் பெற்றுள்ளார்.
வெளிவருவாரா செந்தில் பாலாஜி?
இதே போன்று தான் தமிழக முன்னாள் மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைதாகினார். தொடர்ந்து, ஒரு வருடம் மேலாகியும் அவர் சிறையிலேயே இருக்கிறார்.
ஜாமீன் கோரி, செந்தில் பாலாஜியும் நீதிமன்றங்களை நாடி வருகிறார்.
சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி நேரில் ஆஜராகினார் செந்தில் பாலாஜி. அவரின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.