மனிதர்களை பயன்படுத்தி மனித கழுவுகளை நீக்கினால் சிறை தண்டனை - ஆட்சியர் எச்சரிக்கை!

Tamil nadu Governor of Tamil Nadu Namakkal
By Swetha Jun 19, 2024 04:36 AM GMT
Report

கழிவு நீரை அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் சிறை தண்டனை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மனித கழுவு 

கைகளால் மலம் அள்ளும் பணித்தடை மற்றும் மறு வாழ்வளித்தல் சட்டத்தின் கீழ் தங்கள் வீடுகளிலுள்ள செப்டிக் டேங்குள் இறங்கி சுத்தம் செய்ய எந்தவொரு தனி நபரையும் நியமிப்பது சட்டவிரோதமானது மற்றும் தண்டணைக்குரிய குற்றமாகும்.

மனிதர்களை பயன்படுத்தி மனித கழுவுகளை நீக்கினால் சிறை தண்டனை - ஆட்சியர் எச்சரிக்கை! | Will Send To Jail If Man Disposal Waste

ஒரு கட்டிடத்தில் செப்டிக் டேங்க் அல்லது கழிவு நீர் பாதை சுத்தம் செய்யும் போது சுத்தம் செய்யும் நபர் மரணம் அடைந்தாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ வீட்டு உரிமையாளர் / கட்டிட உரிமையாளர்/ வாடகைக்கு குடியிருப்போர், நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரரே பொறுப்பாவார்கள்.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை முற்றிலும் ஒழிக்கப்படும் - திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை முற்றிலும் ஒழிக்கப்படும் - திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி

சிறை தண்டனை 

சுத்தம் செய்யும் நபர் மரணம் அடைந்தால் கட்டிட உரிமையாளர்/ வாடகைக்கு குடியிருப்போர்/ ஒப்பந்ததாரர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மனிதர்களை பயன்படுத்தி மனித கழுவுகளை நீக்கினால் சிறை தண்டனை - ஆட்சியர் எச்சரிக்கை! | Will Send To Jail If Man Disposal Waste

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் கழிவுநீரை அகற்ற, சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். கல்வி, வணிக நிறுவனங்கள், ஆலைகளில் கழிவுநீரை அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் 2 ஆண்டு சிறை,ரூ. 2லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.