மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை முற்றிலும் ஒழிக்கப்படும் - திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி

leader dmk stalin human waste
By Jon Mar 08, 2021 01:06 PM GMT
Report

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில்,அதற்கான தேர்தல் பணிகளில் பல்வேறு கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த தேத்தலில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாத தேர்தலை முதன் முறையாக அதிமுக மற்றும் திமுக கட்சியினர் எதிர்கொள்ள உள்ளனர்.

இதில் ஒரு கட்டமாக தமிழகத்தின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல்திட்டங்களுக்காக “விடியலுக்கான முழக்கம்” என்ற மாபெரும் பொதுக்கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றுவருகிறது. அப்போது அந்த திருச்சி மாநாட்டில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “தமிழகத்தின் எதிர்காலமாக இந்த திருச்சி மாநாடு அமையவுள்ளது.

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும். கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் வழங்கப்படும். வேலையில்லா திண்டாட்டம் முழுமையாக ஒழிக்கப்படும். மேலும் தற்போது நடைமுறையில் உள்ள மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும்" என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.