கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு பரிசீலனை!
புதிய கவர்னர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்.என்.ரவி
மாநில கவர்னராக நியமிக்கப்படுபவர்கள் 5 ஆண்டு காலம் வரை இப்பதிவில் இருக்கலாம். அதன்பிறகு, புதிய ஒருவரை நியமிக்கும் வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் அல்லது மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மீண்டும் கவர்னராக அவரே நியமிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

அந்த வகையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் இம்மாதம் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தற்போது, டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி, பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்துள்ளார்.
நீட்டிக்கப்படுமா?
எனவே அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, வேறு சில மாநில கவர்னர்களின் பதவிக்காலமும் முடிவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழகம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்கலாமா? என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெளிநாடொன்றில் பதிவான பயங்கர துப்பாக்கி சூடு...! சுமார் 17 பேர் பலி - அதிகரிக்கும் பதற்றம் IBC Tamil
தன் மகளைப் பாதுகாக்க முடியவில்லை: அத்துமீறலுக்கு உள்ளான அனுராதபுரம் பெண் வைத்தியரின் தந்தை கண்ணீர் மல்க சாட்சி IBC Tamil