வின்னர் பட கைப்புள்ள கதாப்பாத்திரம் போன்றவர் ஆளுநர் ஆர்.என். ரவி - உதயநிதி ஸ்டாலின்!
வின்னர் படத்தில் வரும் கைப்புள்ள கதாப்பாத்திரம் போன்றவர் கவர்னர் ஆர்.என்.ரவி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
அரக்கோணம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அந்த தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அவர் ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.
அப்போது ஆற்காட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின் "ஆற்காட்டில் புதிய பஸ் நிலையம், காவனூர் மருத்துவமனை, வணிகவளாகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. திண்டிவனம்-நகரி ரெயில் பாதை விரைந்து அமைக்கப்படும், விளாப்பாக்கம் கூட்டுறவு வங்கி, ஆற்காட்டில் அரசு கல்லூரிகள் அமைக்கப்படும்.
கைப்புள்ள கதாப்பாத்திரம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததை கேட்டால் மத்திய அரசு நிதியில்லை என்று சொல்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி அல்ல, ஆர்.எஸ்.எஸ்.ரவி.
வின்னர் படத்தில் வரும் கைப்புள்ள கதாப்பாத்திரம் போன்றவர் கவர்னர் ஆர்.என்.ரவி. தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர்" என்று பேசினார்.