கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு பரிசீலனை!

Tamil nadu R. N. Ravi Government Of India
By Swetha Jul 19, 2024 03:42 AM GMT
Report

புதிய கவர்னர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்.என்.ரவி

மாநில கவர்னராக நியமிக்கப்படுபவர்கள் 5 ஆண்டு காலம் வரை இப்பதிவில் இருக்கலாம். அதன்பிறகு, புதிய ஒருவரை நியமிக்கும் வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் அல்லது மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மீண்டும் கவர்னராக அவரே நியமிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு பரிசீலனை! | Will Rn Ravi Continues To Be Governor Of Tamilnadu

அந்த வகையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் இம்மாதம் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தற்போது, டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி, பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்துள்ளார்.

வின்னர் பட கைப்புள்ள கதாப்பாத்திரம் போன்றவர் ஆளுநர் ஆர்.என். ரவி - உதயநிதி ஸ்டாலின்!

வின்னர் பட கைப்புள்ள கதாப்பாத்திரம் போன்றவர் ஆளுநர் ஆர்.என். ரவி - உதயநிதி ஸ்டாலின்!

நீட்டிக்கப்படுமா? 

எனவே அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, வேறு சில மாநில கவர்னர்களின் பதவிக்காலமும் முடிவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு பரிசீலனை! | Will Rn Ravi Continues To Be Governor Of Tamilnadu

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழகம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்கலாமா? என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.