பயிற்சியாளர் பொறுப்பு - டிராவிட் தொடருவாரா..? பிசிசிஐ எடுத்த முடிவு.!
இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் கடந்த நவம்பர் 2021- ஆம் ஆண்டு பதவி ஏற்றுக்கொண்டார்.
டிராவிட் தொடருவாரா..?
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்றி கொண்டது முதல் இந்திய அணி உலகக்கோப்பை டெஸ்ட் மற்றும் உலகக்கோப்பை ஒருநாள் தொடர் இரண்டிலும் இரண்டாவது இடத்தை பிடித்தது.

அவரின் 2 ஆண்டு ஒப்பந்தம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதன் காரணமாக அணிக்கு மற்றொறு பயிற்சியாளர் நியமிக்கப்படுவாரா..? என்ற கேள்விகள் எழ துவங்கின.
பிசிசிஐ முடிவு..?
காரணமாக பலரும் இந்திய அணி உலககோப்பையை கோட்டை விட்டதே காரணமாக கூறப்பட்டது. ஆனால், இந்திய அணியின் நிர்வாகம், அவரின் மேற்பார்வையில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டதை அடுத்து, மீண்டும் அவரின் ஒப்பந்தத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

ஆனால் இதில் இன்னும் ராகுல் டிராவிட் எந்த வித பதிலும் அளிக்கவில்லை. அவ்வாறு அவர் தனது பொறுப்பை நீடித்தார் என்றால், இந்திய அணி தென்னாபிரிக்காவில் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் முதல் அவர் தனது பணியை மீண்டும் துவங்குவார்.
பரபரப்பாக நகரும் தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரத்தில் த.வெ.க. முன்னிலை - 1 மணி நிலவரம் IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan