உயிரே போனாலும் நீட் தேர்வை எடுக்க மாட்டோம் - அண்ணாமலை உறுதி
நீட் தேர்வு விவகாரம் தமிழக அரசியலில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
பாஜக - பாமக கூட்டணி
அதிமுக கூட்டணியில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாமக பாஜகவுடனான கூட்டணியை தொடர்ந்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ள நிலையில், இந்த கூட்டணி வாக்கு வங்கியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உண்டாகியிருக்கின்றது.
இந்த நாடாளுமன்ற தேர்தலில், நீட் தேர்வையும் முக்கிய அம்சமாக குறிப்பிட்டுள்ளது தமிழக கட்சிகள். நீட் தேர்வு விலக்கு இருக்கும் என திராவிட கட்சிகள் உறுதிபட தெரிவித்துள்ள நிலையில், பிரச்சாரத்தில் பாஜகவின் அண்ணாமலை தெரிவித்துள்ள கருத்துக்கள் அதிர்ச்சிகர ஒன்றே.
அதாவது அவர் பேசும் போது, எங்களுடைய உயிரே போனாலும் நீட் எடுக்கமாட்டோம், ஏழை மக்களுக்கு நல்லது. முதல்முதலாக ஏழை மாணவர்கள் நீட் தேர்வினால், அரசு கல்லூரிகளுக்கு செல்கிறார்கள்.
அதனால் உயிரே போனாலும் நீட் தேர்வை எடுக்கமாட்டோம்.
அப்படி நீட்டை எடுத்து விட்டு தான் அரசியல் செய்யணும் என்றால் அவ்வாறான அரசியலில் தங்கள் இருக்கப்போவதில்லை என உறுதிபட அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீட் தேர்வு விலக்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் பாமகவும் இருந்த நிலையில், தற்போது அண்ணாமலையின் இந்த நிலைப்பாடு அக்கட்சிக்கு அதிர்ச்சியையே கொடுக்கும்