ராமர் கோவில் RSS - பாஜக விழா..! கலந்து கொள்ளவோமா..? காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு..?
வரும் 22- ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா குறித்து மும்முரம் காட்டி வருகிறது பாஜக அரசு.
அயோத்தி ராமர் கோவில்
வரும் 22-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. ராமர் கோவில் உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22-ஆம் தேதி மிக பிரமாண்டமாக ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது. பல முக்கிய தலைவர்களும், பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ள இந்த ராமர் கோவிலை நாட்டின் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அது குறித்த விளக்கத்தை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது.
மறுத்த காங்கிரஸ்
இது குறித்து வெளியிடப்பட்ட சமூகவலைத்தள பதிவில், “சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள கடந்த மாதம் அழைப்பிதழ் வந்துள்ளது.
நாட்டில் உள்ள லட்சக்கணக்கானவர்களால் கடவுள் ராமர் வழிபடப்படுகிறார். மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால், ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் அயோத்தி ராமர் கோயிலுக்கு அரசியல் சாயம் பூசி வருகின்றனர்.
முழுமையடையாத கோவிலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் திறந்து வைத்தது தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்த பார்க்கின்றனர்.” என கூறப்பட்டுள்ளது. மேலும், “2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு, ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே,
Here is the statement of Shri @Jairam_Ramesh, General Secretary (Communications), Indian National Congress. pic.twitter.com/JcKIEk3afy
— Congress (@INCIndia) January 10, 2024
அதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்எஸ்எஸ்/பாஜக நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.