அயோத்தி ராமர் கோவிலுக்கு போணுமா..? சேகர் பாபு சொன்ன முக்கிய தகவல்..!
அயோத்தி ராமர் கோவில் விஷயம் நாடுமுழுவதும் தற்போது பெரும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.
அயோத்தி ராமர் கோவில்
வரும் 22-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. ராமர் கோவில் உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22-ஆம் தேதி மிக பிரமாண்டமாக ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது.
பல முக்கிய தலைவர்களும், பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ள இந்த ராமர் கோவிலை நாட்டின் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.
போறீங்களா..?
இந்த கோவிலுக்கு செல்ல பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அயோத்தி பயணம் குறித்த செய்தி ஒன்றை தமிழக அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ளார்.
இதற்காக பக்தர்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டால், அது முதல்வருக்கு அனுப்பப்படும் என தெரிவித்து, பக்தர்கள் பயணிக்க உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள தமிழக அறநிலைய துறை தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.