உற்சாகமாக நடந்து முடிந்த காதல் திருமணம் - சினிமாவை விட்டு விலகுகிறார் கீர்த்தி சுரேஷ்?
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணதுக்கு பிறகு சினிமாவை விட்டு விலகுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
ரஜினி முருகன், தொடரி,ரெமோ,பைரவா,தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், அவர் டிசம்பர் 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
ஆண்டனி தட்டில் என்ற துபாயில் ஒரு பெரிய தொழிலதிபரை தான் கரம் பிடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் 13ம் ஆண்டுகள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இது இரு வீட்டாரின் சம்மதத்துடன் ஹிந்து மற்றும் கிரிஸ்டியன் முறைபடி திருமணம் செய்துகொண்டனர்.
விலகுகிறார்..?
இந்த நிலையில், திருமணத்துக்கு பின்னர் நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவை விட்டு விலக உள்ளாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் அவர் கைவசம் தற்போது ரிவால்வர் ரீட்டா மற்றும் கண்ணிவெடி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே உள்ளன
இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதனால் புதிதாக அவர் எந்த படங்களிலும் கமிட் ஆகாததால் ஒரு வேளை சினிமாவை விட்டு கீர்த்தி விலகவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு விலகி படத்தயாரிப்பில் ஈடுபட உள்ளார் என்று செய்திகள் வெளியானது. ஒருவேளை கீர்த்தி சினிமாவை விட்டு விலகி விடுவாரோ என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழூந்துள்ளது.