காதலே காதலே.. எல்லாம் அவருக்காக - திருமணத்துக்கு முன் மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்?
தனது காதலனுக்காக கீர்த்தி சுரேஷ் மதம் மாறப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமா முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
ரஜினி முருகன்,தொடரி,ரெமோ,பைரவா,தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், அவர் டிசம்பர் 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
மதம்
ஆண்டனி தட்டில் என்ற துபாயில் ஒரு பெரிய தொழிலதிபரை தான் கரம் பிடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் 13ம் ஆண்டுகள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இது இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம் என கூறப்படுகிறது.
ஆண்டனி தட்டில் ஒரு கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்காக கீர்த்தி மதம் மாற உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இவர்களின் திருமணம் டிசம்பர் மாதம் கோவாவில் ஒரு தேவாலயத்தில், நடைபெற இருக்கிறது. ஆண்டனி தட்டில் கிறிஸ்தவர் என்பதால் தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற இருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் இந்து பெண் என்பதால் கிறிஸ்துவராக மாறி திருமணம் செய்து கொள்வாரா, இல்லை கிறிஸ்தவ முறைப்படி காதலரை திருமணம் செய்து கொள்வாரா? இல்லை, மீண்டும் இந்து முறைப்படி கேரளாவில் திருமணம் நடைபெறுமா என்பது தெரியவில்லை.