கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துக்கொள்ளபோகும் நண்பர் இவர்தான் - தீயாய் பரவும் ஃபோட்டோ
கீர்த்தி சுரேஷ் தன் நண்பருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமா முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ரஜினி முருகன்,தொடரி,ரெமோ,பைரவா,தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
திருமணம்?
இந்நிலையில், அவர் விரைவில் திருமணம் செய்யப்போவதாக செய்திகள் பரவியது. அதன்படி, தனது நீண்ட நான் நண்பரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான ஃபர்ஹான் பின் லியாகத் உடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இவருடன் அண்மையில் காதல் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இன்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை IBC Tamil
