பாஜகவுடன் கூட்டணியா..?சஸ்பென்ஸ் வைத்து சென்ற ஓபிஎஸ்..?

By Karthick Sep 27, 2023 08:16 AM GMT
Report

அதிமுக பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில், பாஜகவின் கூட்டணிக்கு ஓபிஎஸ் அணி செல்லுமா என்ற கேள்விகள் அதிகளவில் எழுந்துள்ளது.'

பரபரப்பாகும் தேர்தல் களம்  

வரும் நாடாளுமன்ற தேர்தல் பல்வேறு வகையில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. மத்தியில் மட்டுமின்றி தற்போது அதிமுகவின் திடீர் முடிவில் தமிழகத்திலும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றது.

will-join-hands-with-bjp-ops-responds

பாஜக புதிய கூட்டணியை அமைத்து தான் தேர்தலை சந்திக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், அந்த கட்சியின் கூட்டணிக்கு யார் யார் செல்வார்கள் என்ற கேள்விகள் தமிழக அரசியல் களத்தில் தற்போது அதிகளவில் எழுந்துள்ளது. 

அதிமுக கூட்டணியின் புதிய பெயர் - ஜெயக்குமார் சொன்ன பாயிண்ட்

அதிமுக கூட்டணியின் புதிய பெயர் - ஜெயக்குமார் சொன்ன பாயிண்ட்

சஸ்பென்ஸ் வைத்த ஓபிஎஸ்

திமுக அதிமுகவை தாண்டி தான் கூட்டணி வைக்கும் சூழலில் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணிகள் இருக்கும் சூழலில், பாஜகவின் கூட்டணிக்கு இக்கட்சிகள் செல்லுமா? என்ற கேள்விகளும் எழ துவங்கியிருக்கின்றன. இந்நிலையில், இன்று இது குறித்து அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னிர்செல்வம் செய்தியாளர்களிடம் பதிலளித்துள்ளார்.

will-join-hands-with-bjp-ops-responds

சென்னையில் மறைந்த சி பா ஆதித்தனாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு மரியாதை செலுத்திய பின்பு சென்னை விமான நிலையத்தில் அவரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அவர், நாளை மாலை கூட்டணி குறித்து நிச்சயமாக தெரிவிக்கப்படும் என தெரிவித்து சென்றார்.