ஐசிசியின் தலைவர் ஆகிறாரா ஜெய் ஷா? கூடுகிறது ஐசிசி கூட்டம்
ஜெய் ஷா ஐ.சி.சியின் அடுத்த தலைவர் ஆக உள்ளாரா என தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி
ஐசிசி என அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக அளவில் கிரிக்கெட் போட்டிகளை, கிரிக்கெட் வாரியங்களை கட்டுப்படுத்தும் உச்சபச்ச அதிகாரம் பெற்ற அமைப்பாகும். தற்போது இதன் தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே செயல்பட்டு வருகிறார்.
இவரின் பதவிக்காலம் இந்த வருட டிசம்பருடன் முடிவடைகிறது. அதே சமயம் பிசிசிஐ தலைவராக உள்ள ஜெய் ஷாவின் பதவிக்காலம் முடிவடையவும் இன்னும் ஒரு ஆண்டுகாலமே உள்ளது. இந்நிலையில் ஜெய் ஷா இந்த பதவிக்கு போட்டியிட வலியுறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஐசிசி கூட்டம்
ஐ.சி.சி யின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் T20 உலகக்கோப்பை அமெரிக்காவில் நடத்தப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, பாகிஸ்தானில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு இந்திய அணி செல்ல மறுப்பது, ஐ.சி.சி தலைவர் பதவி உள்ளிட்ட முக்கிய விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
எனவே ஜெய் ஷா ஐ.சி.சி யின் தலைவர் பொறுப்பை ஏற்பாரா இல்லை இல்லை கிரேக் பார்கிளேவின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே 2014 முதல் 2020 வரை ஐ.சி.சி தலைவராக இந்தியாவை சேர்ந்த நா.ஸ்ரீனிவாசன், ஷஷாங்க் மனோகர் ஆகியோர் இருந்து உள்ளனர்.