20 ஆண்டுகளாக நியூசிலாந்து எதிராக தொடரும் சாபம்!! இன்றாவது மாற்றுமா ரோகித் அணி!!

Rohit Sharma Virat Kohli Indian Cricket Team
By Karthick Oct 22, 2023 04:41 AM GMT
Report

உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் தர்மசாலா மைதானத்தில் பல பரீட்சை நடத்தவுள்ளன.

உலகக்கோப்பை தொடர்

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இது வரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் முறையே நியூசிலாந்து மற்றும் இந்தியா. இவ்விரு அணிகளும் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

will-india-defeat-newzealand-in-worldcup

நியூசிலாந்து அணி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நெதர்லாந்து, பங்களாதேஷ் மற்றும் ஆப்கனிஸ்தான் ஆகிய அணிகளை தும்சம் செய்து வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியா, ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்துள்ளது.

தோனி-ஜடேஜாவின் சாதனையை துவம்சம் செய்த நெதர்லாந்து வீரர்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி!

தோனி-ஜடேஜாவின் சாதனையை துவம்சம் செய்த நெதர்லாந்து வீரர்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி!

20 ஆண்டுகள் சோகம்

தோல்வியே காணாத இவ்விரு அணிகள் இன்று மோதுவதால் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இதில் மற்றொரு சுவாரசியமும் இடம் பெற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அணி நியூசிலாந்து அணியை உலகக்கோப்பை தொடரில் வீழ்த்தியது இல்லை என்ற சோகம் இந்திய அணியை பின்தொடர்ந்து வருகின்றது.

will-india-defeat-newzealand-in-worldcup

இதில், 2019-இல் தல தோனி ரன் அவுட்டாகி கண் கலங்கி சென்றதும் அடங்கும். கடைசியாக இந்தியா 2003-ஆம் ஆண்டு சென்சூரியனில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாற்றுமா அணி?

இந்த தொடரில் பேட்டிங், பௌலிங் என சிறப்பாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த சோகத்திற்கு முடிவுரை எழுதுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.

will-india-defeat-newzealand-in-worldcup

மறுமுனையில் நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டரை சமாளிக்கவே இந்த தொடரில் அணிகள் திணறி வருவதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலா மைதானத்தில் பகல் 2 மணிக்கு துவங்கவுள்ளது.