தோனி-ஜடேஜாவின் சாதனையை துவம்சம் செய்த நெதர்லாந்து வீரர்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய அணி வீரர்கள் தோனி-ஜடேஜாவின் உலகக்கோப்பை சாதனையை நெதர்லாந்து அணி வீரர்கள் முறியடித்துள்ளனர்.
உலகக்கோப்பை
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து-இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 262 ரன்களை குவித்தது.
அந்த அணி சார்பில், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 70 ரன்னும் , லோகன் வான் பீக் 59 ரன்னும் அதிகபட்சமாக எடுத்தனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 263 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில் நெதர்லாந்து அணியின் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மற்றும் வான் பீக் ஜோடி இந்த போட்டியில் புதிய சாதனையை படைத்துள்ளனர்.
புதிய சாதனை
இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்து உலகக் கோப்பை வரலாற்றில் 7வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையை படைத்தனர். இதற்கு முன்னர் 2019ம் ஆண்டு உலகக் கோப்பையின் ஒரு போட்டியில் 7வது விக்கெட்டுக்கு தோனி - ஜடேஜா இந்த சாதனையை படுத்திருந்தனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான அந்த போட்டியில் தோனி - ஜடேஜா 7வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இந்த சாதனையை தற்போது சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்- லோகன் வான் பீக் ஜோடி முறியடித்துள்ளனர்.