Thursday, Jul 24, 2025

“பாகிஸ்தான் ஜிந்தாபாத்” சொல்லக் கூடாதா? பாக். ரசிகரை தடுத்த காவலர் - வைரலாகும் Video!

Cricket India Pakistan national cricket team ICC World Cup 2023
By Jiyath 2 years ago
Report

பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா போட்டியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷமிட்ட பாகிஸ்தான் ரசிகரை காவல் அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.

தடுத்து நிறுத்திய போலீஸ்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியின்போது பாகிஸ்தான் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று கோஷமிட்டுள்ளார்.

“பாகிஸ்தான் ஜிந்தாபாத்” சொல்லக் கூடாதா? பாக். ரசிகரை தடுத்த காவலர் - வைரலாகும் Video! | Pakistan Zindabad Policeman Stopped The Pak Fan

அப்போது அங்கிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷாமிடக்கூடாது என்று கூறி அந்த ரசிகரை தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது அந்த பாகிஸ்தான் ரசிகர், இந்திய ரசிகர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷமிடும்போது, நான் ஏன் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷமிடக் கூடாது?' என்று கேள்வி கேட்டார்.

இந்தியாவை வீழ்த்தினால் வங்கதேச வீரருடன் அதற்கு நான் ரெடி - பாகிஸ்தான் நடிகை பகீர் வாக்குறுதி!

இந்தியாவை வீழ்த்தினால் வங்கதேச வீரருடன் அதற்கு நான் ரெடி - பாகிஸ்தான் நடிகை பகீர் வாக்குறுதி!

சாடும் இணையவாசிகள்

அதற்கு அந்த போலீஸ் அதிகாரி அப்படி கோஷமிட்ட கூடாது என்று கூறியுள்ளார். உடனே அந்த ரசிகர், பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா போட்டியைப் பார்க்கும்போது நான் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று சொல்லக் கூடாதா?" என மீண்டும் கேள்வி கேட்டார்.

“பாகிஸ்தான் ஜிந்தாபாத்” சொல்லக் கூடாதா? பாக். ரசிகரை தடுத்த காவலர் - வைரலாகும் Video! | Pakistan Zindabad Policeman Stopped The Pak Fan

பாகிஸ்தான் ரசிகரின் அந்த கேள்விக்கு பதிலளிக்காமல், போலீஸ் அதிகாரி அங்கிருந்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த இணையவாசிகள், தனது நாட்டு அணியினரை உற்சாகப்படுத்த ரசிகர்கள் அனுமதிக்கப்படாதது வெட்கக்கேடானது என்று அந்த போலீஸ் அதிகாரியை கடுமையாக சாடி வருகின்றனர்.