இத மட்டும் நிரூபித்து காட்டுங்கள் - 1 கோடி ரூபாய் தருகிறேன்!! ஜெயக்குமார் அதிரடி

ADMK D. Jayakumar
By Karthick Apr 23, 2024 09:25 AM GMT
Report

தனது குடும்பத்திலேயே பலருக்கு ஓட்டு இல்லை என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு

தமிழகத்தில் தேர்தல் வாக்கெடுப்பு பரபரப்பு முடித்துள்ள நிலையில், பலரும் தங்களது பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளது என தெரிவித்து வருகிறார்கள். பிரபலங்கள் முதல் பலரும் இதே குற்றச்சாட்டை வைத்து வருகிறார்கள்.

will-give-1-crore-jayakumar-challenges

இச்சூழலில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது வருமாறு, வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாதது பற்றி தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், ஏராளமான வாக்காளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

ராயபுரத்தில் முடிசூடா மன்னனாக இருந்தேன் - பாஜக கூட்டணியால் தான் தோற்றேன் - ஜெயக்குமார்

ராயபுரத்தில் முடிசூடா மன்னனாக இருந்தேன் - பாஜக கூட்டணியால் தான் தோற்றேன் - ஜெயக்குமார்

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சொதப்பிவிட்டதாக கூறி, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது போன்ற குளறுபடிகள் தேர்தல் ஆணையத்தின் தோல்வி என சாடினார்.

1 கோடி 

தொடர்ந்து பேசிய அவர், தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கே இம்முறை வாக்குரிமை இல்லாமல் போனது என தெரிவித்து இது போன்ற குளறுபடிகள் தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா..? என்ற கேள்வியை தூண்டுவதாக தெரிவித்தார்.

will-give-1-crore-jayakumar-challenges

கட்சிக்காக அல்லாமல் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட தனது மகனுக்காக உழைத்தேன் என யாரவது ஒரு புகைப்பட ஆதாரம் காட்டினாலும் கூட ரூ.1 கோடி வழங்க தயார் என்றார்.