ராயபுரத்தில் முடிசூடா மன்னனாக இருந்தேன் - பாஜக கூட்டணியால் தான் தோற்றேன் - ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருகின்றார்.
ஜெயக்குமார் விமர்சனம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசியது வருமாறு,
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் எங்கள் ஆட்சியே போனது. இல்லையென்றால் நான் ஜெய்திருப்பேன். ராயபுரத்தில் தோற்கும் ஆளா நான். இது வரை நான் இதனை குறித்து பேசியதில்லை.
கேள்வி கேட்டதால் மனம் திறந்து கூறுகிறேன். 25 வருடம் முடிசூடா மன்னனாக ராயபுரத்தில் இருந்தேன். தோல்வியென்பதே அறியாதவனாக இருந்தேன். பாஜகவால் தான் தோற்றேன்.
பாஜக இல்லையென்றால் நான் சட்டமன்றம் சென்றிருப்பேன். தொகுதி ராயபுரத்தில் 40 ஆயிரம் சிறுபான்மையின மக்களுக்கு என் மேல் கோபம் கிடையாது.
Waste luggage
அப்போதே கூறினார்கள், பாஜக கூட்டணியை விட்டுவிட்டு வாருங்கள் என்று. நானும் கூறினேன் "waste luggage" தான் என்ன பண்ணுவது. சமயம் வரும் போது கழட்டி விட்டுவிடுவேன் என்று கூறினேன்.
அது "waste luggage" ஆகையால் கழட்டி விட்டுட்டோம். அது ஓடாது வண்டி. பாஜக இல்லையென்றால் நான் வென்றிருப்பேன். நான் zero'வில் இருந்தேன் ஓடினேன். திமுக 40 ஆயிரத்தில் இருந்து ஓடினார்கள். ஆகையால் தான் கூறுகிறேன் 2019, 2021 இரண்டு தேர்தல்களிலும் நாங்கள் தோற்றதற்கு காரணம் பாஜக தான்.