படித்து பாஸ் ஆனாரா? பிட் அடித்து பாஸ் ஆனாரா - நாக்கை வெட்டணும் - செல்லூர் ராஜு ஆவேசம்
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக சாடியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரம்
மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அவர் பிரச்சாரம் செய்த போது அவர் பேசியது வருமாறு,
அரைவேக்காடு ஒருவர் இருக்கிறார்,கத்துக்குட்டி என்று முன்னரே சொல்லிட்டேன். முந்தநாள் பெய்த மழையில் பெய்த காளான், அவருக்கு என்ன தெரியும். அழகிரி - தென்தமிழகத்தில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தியவர். அவரும் இப்படி தான் சொன்னாரு அதிமுக அழிஞ்சிடும். இப்போ அவரு அரசியலிலே இல்லை.
அரசியலில் கத்துக்குட்டி அண்ணாமலை. வரலாறு தெரியாத அண்ணாமலை, படித்து பாஸ் செய்தாரா? இல்லை பிட் அடிச்சு பாஸ் செய்தாரா என தெரியவில்லை.
அருகதை உள்ளதா..?
எடப்பாடியை பற்றி பேசுகிறார். அவர் பல பதவிகளில் இருந்தவர். அண்ணாமலை ஒரு பதவி கூட வெற்றி பெறவில்லை. அதிமுகவை பற்றி பேச அவருக்கு அருகதை உள்ளதா..?
அவுங்க கட்சி துவங்குவதற்கு முன்பே உருவான கட்சி அதிமுக. எங்கள அழிஞ்சி போயிடுவோம்'னு சொல்றாரு. தகுதியே இல்லாமல் அவர் எங்க அம்மாவை பற்றி பேசுகிறார்.
உங்களால் நான், உங்களுக்காகவே நான் என வாழ்ந்த அம்மாவை குறித்தும், திராவிட கட்சியை உருவாக்கிய அண்ணாவை பற்றி பேசுகிறார். அவருடைய நாக்கு வெட்ட பட வேண்டுமா..? இல்லையா..?