இரட்டை இலை சின்னம் - இது தான் பிளானா..? அதிமுகவை மடக்கும் ஓபிஎஸ்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை குறிவைத்து ஓபிஎஸ் தரப்பு மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது.
சின்னம்
கட்சி, சின்னம் என அனைத்துமே பொதுச்செயலாளரான இபிஎஸ் வசம் வந்துவிட்ட நிலையிலும், எப்படியேனும் மீண்டும் கட்சி சின்னத்தில் போட்டியிட ஓபிஎஸ் தரப்பு முயன்று வருகின்றது.
ஈரோடு இடைத்தேர்தலில் அவர்கள் எடுத்த முடிவு பின்னடைவாக அமையும், தேர்தலில் இருந்து ஓபிஎஸ் தரப்பு வாபஸ் பெற்றது.
இந்த சூழலில் , இன்று உரிமை மீட்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின் தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ், இறுதியாக தேர்தலின் போது சின்னம் ஒதுக்கப்படும் போது தேர்தல் ஆணையம் நல்ல முடிவை எடுக்கும் என்று தெரிவித்தார்.
கூட்டணி குறித்து பதிலளித்த அவர், பாஜகவுடனான கூட்டணி குறித்து உரிய நேரத்தில் சரியான முடிவை எடுத்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.