சிஎஸ்கே-க்கு திரும்ப வரும் டுபிளெசிஸ்? ஆர்சிபி எடுக்க போகும் அந்த முடிவு..வெளியான தகவல்!
பாப் டு பிளெசிஸ் சிஎஸ்கே அணிக்கு திரும்ப வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிஎஸ்கே
பாப் டு பிளெசிஸ்க்கு தற்போது 40 வயதாகிறது. இதனால் rcb அணி அவரை அடுத்த சீசனின் எடுக்காது போன்ற செய்திகள் பரவி வருகிறது. ராகுல், ஜாஸ் பட்லர் போன்ற வீரர்களை ஆர்சிபி அணி எடுக்கப் போகிறது எனவும் கூறப்படுகிறது.
ஒருவேளை டுபிளசிசை ஆர் சி பி அணி எடுக்கவில்லை என்றால் சிஎஸ்கே அணி அவரை எடுக்க வாய்ப்பு இருக்கிறது என சொல்லப்படுகிறது. காரணம் எப்போதுமே சிஎஸ்கே அணி வயதான வீரர்களை ஏலத்தில் எடுப்பது தெரிந்த விஷயமே. மேலும் 40 வயது ஆகிவிட்டாலும் டுபிளசிஸ் உடல் தகுதியுடன் சிறப்பாக இருக்கின்றார்.
அது மட்டும் இல்லாமல் தற்போது ருதுரஜ் நம்பர் மூன்றாவது வீரராக தான் களமிறங்குகிறார். இதனால் தொடக்க வீரராக கான்வே உடன் டுப்ளசிஸ் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணி டுபிளசிசை கண்டிப்பாக எடுக்க வாய்ப்பு இருக்கிறது.
டுபிளசிஸ்
ஒருவேளை டுபிளசிஸ் ஒய்வு பெற்றால் மட்டுமே அவர் சிஎஸ்கே அணியில் வீரராக இருக்க முடியாது. அப்படியே ஆனாலும் அவரை சிஎஸ்கே அணி பயிற்சி குழுவில் இணைத்துக்கொள்ள முன்வருவார்கள்.
டுபிளசிஸ் நல்ல பேட்ஸ்மேன் மட்டுமல்லாமல் நல்ல ஃபீல்டராகவும் இருப்பதால் அவருக்கு நிச்சயம் பயிற்சி குழுவில் இடம் கிடைக்கும். சிஎஸ்கே அணியின் சிறந்த சேவகன் ஆக விலங்கி வந்த டுபிளசிஸ், ஆர் சி பி அணிக்கு சென்றதும் இங்குள்ள பல ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் டுபிளசிஸ் மீண்டும் வருகிறார் என தெரிந்தால் நிச்சயம் சிஎஸ்கே ரசிகர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பார்கள். இது நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.