சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் நீக்கம்..அவருக்கு பதில் யார்? பரவும் தகவல்!
சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் நீக்கப்படுவதாக தகவல் பரவி வருகிறது.
ருதுராஜ் நீக்கம்..
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்படுவார் என சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. அதற்கு முக்கிய காரணம், ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணியில் சேர்வார் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
அவர் சிஎஸ்கே அணியில் இணைந்தால் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் எனவும், தோனிக்கு அடுத்து ரிஷப் பண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருப்பார் எனவும் கூறப்படுகிறது.
எனவே ருதுராஜ் கெய்க்வாட்டை விட அதிக அனுபவம் கொண்ட வீரர் என்பதால் அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தியின் உண்மை தன்மை குறித்து விசாரித்த போது, 2025 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடக்க உள்ளது.
அப்போது ஒவ்வொரு அணியும் மூன்று அல்லது நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். ரிஷப் பண்ட் ஒருவேளை டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து விலக நினைத்தால் அந்த அணி அவரை தக்க வைக்காது. ரிஷப் பண்ட் ஏலத்தில் தான் மீண்டும் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்படும்.
பரவும் தகவல்
அவரை வாங்க ஏலத்தில் கடும் போட்டி நிலவும். அதனால் சிஎஸ்கே அணி அவரை வாங்க நினைத்தாலும் மற்ற அணிகளுடன் கடும் போட்டி போட்டுத் தான் வாங்க வேண்டும். அதுமட்டுமின்றி தங்களிடம் எவ்வளவு தொகை உள்ளது என்றும் பார்க்க வேண்டும்.
அடுத்து ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பே இல்லை எனவும் சிஎஸ்கே வட்டாரத்தில் கூறப்படுகிறது. அவர் 2024 ஐபிஎல் தொடருக்கு இரண்டு ஆண்டுகள் முன்பிருந்தே கேப்டன் பதவிக்காக தயார் செய்யப்பட்டு இருக்கிறார்.
ஒரு பேட்ஸ்மேனாக அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதே சமயம், 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத போதும் அவரது கேப்டன்சியில் பெரிய குறைகள் எதுவும் இல்லை என சிஎஸ்கே நிர்வாகம் கருதுகிறது. எனவே, அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வாய்ப்பே இல்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும், தோனியே ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியின் கீழ் ஆடும் போது, வேறு எந்த முக்கிய வீரர் சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டாலும், அவர் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியில் தான் ஆட வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகம் உறுதியாக இருக்கிறது.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan
