சமையல் எண்ணெய் விலை உயருமா? வெளியான அதிர்ச்சி தகவல்!
பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் விலை உயரப்போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சமையல் எண்ணெய்
இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பெரும்பாலும் மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு மலேசியாவிலிருந்து சுமார் 70 ஆயிரம் மெட்ரிக் டன் பாமாயிலுக்கான ஆர்டர்களை அரசு ரத்து செய்துள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் மலேசியாவில் பாமாயில் விலை அதிகரித்திருப்பது தான் என்று கூறப்படுகிறது. மேலும் இறக்குமதி செய்யும் பட்சத்தில் அதற்கான வரியையும் அதிகம் செலுத்த வேண்டும். இதனால் பாமாயில் விலை மேலும் அதிகரிக்க வேண்டியதாக இருக்கும்.
விலை உயர்வு?
அதன்படி, இந்தியாவில் பாமாயில் விலை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வரவேண்டிய 70000 மெட்ரிக் டன் பாமாயிலை இந்தியா பெறவில்லை என்றால் அதற்கான பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
அதனை நிவர்த்தி செய்யும் அளவுக்கு உள்நாட்டில் பனை எண்ணெய் விளைச்சல் இல்லை. இந்த காரணத்தால் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.