இவரு கூட மட்டும் லிப்லாக் சீன் எனக்கு ஓகே... ஓப்பனாக சொன்ன பிரியா பவானி சங்கர்!
பிரியா பவானி சங்கர் நடிப்பில் அண்மையில் "ரத்னம்" படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரியா பவானி சங்கர்
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பிரபலமாகி பின்னர், சின்னத்திரையில் நாயகியானார் பிரியா பவானி சங்கர். நடிப்பும் அவருக்கு பெரும் வரவேற்பை வழங்க, 2017-ஆம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் வெளியான "மேயாத மான்" படத்தின் மூலம் நாயகியாக பெரிய திரையில் அறிமுகமாகினார்.
முதல் படம் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாஃபியா - சாப்டர் -1, தனுஷுடன் திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்தவர் 2023 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் கல்யாணம் கமணியம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
அவருக்கு மட்டும்..
தொடர்ந்து பத்து தல, யானை, ருத்ரன், பொம்மை ரத்னம் போன்ற படங்களிலும் நடித்துள்ள பிரியா பவானி சங்கர் நடிப்பில் அடுத்து மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 வெளிவர இருக்கிறது.
அதே போல, தெலுங்கில் ஸிப்ரா, தமிழில் டிமான்டி காலனி -2 படங்களும் வெளிவர இருக்கிறது. தொடர்ந்து திரைத்துறையில் பெரிய கிளாமர் இல்லாமல் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.
அண்மை பேட்டி ஒன்றில் அவரிடம் ஒன்றில் படங்களில் எந்த நடிகருடன் லிப்லாக் முத்தம் தர சம்மதிப்பீர்கள்? என்ற கேள்விக்கு, உடனே எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லு அர்ஜூனா தான் என கூறி, படத்திற்கு தேவைப்படும் என்றால் அவருடன் லிப்லாக் காட்சியில் நடிப்பேன் எனக் கூறினார்.