திருமணமான அந்த நடிகர் மீதுதான் க்ரஷ் - வெளிப்படையாக சொன்ன பிரியா பவானி சங்கர்

Priya Bhavani Shankar Tamil Cinema
By Sumathi Apr 04, 2024 09:00 AM GMT
Report

தனது க்ரஷ் யார் என்பது குறித்து பிரியா பவானி சங்கர் மனம் திறந்துள்ளார்.

பிரியா பவானி சங்கர் 

தமிழ் சினிமாத்துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

priya bhavani shankar

இதனையடுதது, ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்ததால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபமடைந்தார். இதனையடுத்து மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், சாப்டர் 1, கசட தபற, பொம்மை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நடிகர் கூட லிப்லாக் எனக்கு ஓகே - ஓப்பனாக சொன்ன பிரியா பவானி சங்கர்!

இந்த நடிகர் கூட லிப்லாக் எனக்கு ஓகே - ஓப்பனாக சொன்ன பிரியா பவானி சங்கர்!

க்ரஷ் 

தற்போது இந்தியன் 2 மற்றும் டிமாண்டி காலனி 2 படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சினிமாவில் மட்டுமின்றி தொழிலிலும் கவனம் செலுத்துகிறார். அந்த வகையில், லியாம்ஸ் டைனர் (Liam's Diner) என்ற ஹோட்டலை சமீபத்தில் சென்னையில் திறந்தார்.

திருமணமான அந்த நடிகர் மீதுதான் க்ரஷ் - வெளிப்படையாக சொன்ன பிரியா பவானி சங்கர் | Priya Bhavani Shankar About Married Crush

இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், உங்களுக்கு எந்த நடிகர் மீது க்ரஷ் இருக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், கடந்த நான்கு வருடங்களாக விக்கி கௌஷல் மீதுதான் க்ரஷ் என்று தெரிவித்தார். விக்கி கௌஷல் கத்ரீனா கைஃப்பின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.