கோவையில் தாமரை மீண்டும் கமலை வீழ்த்தும் - பாஜக தலைவர் அதிரடி
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில், கமல்ஹாசன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல் - திமுக கூட்டணி
இன்னும் கூட்டணி கணக்குகள் திமுக வட்டாரத்தில் முடிவடைந்திடாத நிலையில், மேலும் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்தான பேச்சுவார்த்தை ஒரு புறம் நடந்துகொண்டிருக்க கமல், உதயசூரியன் அல்லது காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் பெருமளவில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அவருக்கு கோவை தொகுதி தான் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மீண்டும் கமலை கோவை தொகுதியில் தோற்கடிப்போம் என பாஜகவின் மாநில செயலாளர் சூர்யா தெரிவித்துள்ளார்.
தோற்கடிப்போம்
இது குறித்து அவர் பேசும் போது, ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் தாமரை சின்னத்திடம் கமல் தோற்றுப்போனார் என்பதை குறிப்பிட்டு, கோவை என்பது பாஜகவிற்கு முக்கியமான தொகுதி என்றும், கிட்டத்தட்ட 30% வாக்குகளை பாஜக அங்கு பெரும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், 90-களிலேயே பொதுத்தேர்தலில் அந்த தொகுதியில் பாஜகவிற்கு உறுப்பினரகள் இருந்தார்கள் என குறிப்பிட்ட சூர்யா, மீண்டும் கமலை அதே தொகுதியில் தோற்கடிக்க பாஜக தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.
கடந்த 2021-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனிடம் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.