ஒரு சீட் தான்...மக்கள் நீதி மய்யத்தின் நிபந்தனையை ஒதுக்கிய திமுக..?
நாடாளுமன்ற தேர்தலில், 2 இடங்களில் போட்டியிட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கேட்பதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணி
தமிழகத்தை பொறுத்தமட்டில் திமுக கூட்டணியில் தான் பெரும்பாலான கட்சிகள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்தியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் உள்ளன.
அண்மைக்காலமாக திமுக - காங்கிரஸ் கட்சிகளுடன் நெருக்கம் காட்டி வரும் கமல் ஹாசன், வரும் மக்களவை தேர்தலில் அக்கூட்டணியில் தான் இடம்பெறுவர் என்று கூறப்படுகிறது. ஆனால், தற்போது வரை கூட்டணி உறுதிப்படுத்தப்படவில்லை.
2 இடங்கள்...
இந்த சூழலில் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, மக்கள் நீதி மய்யம் 2 இடங்களை கூறியதாக ஒரு செய்தியும், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 2'ஐ மக்கள் நீதி மய்யம் பெற்று நிற்கும் என்றெல்லாம் செய்திகள் எழுதப்பட்டு வருகின்றன.
இன்று வெளியான அண்மைசெய்தியில், திமுகவுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் மக்கள் நீதி மய்யம் 2 இடங்களை கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இதனை திமுக நிராகரித்து விட்டதாகவும் தகவல் உள்ளது.
அதே நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறும் போது, இது வரை தங்களிடம் கூட்டணி குறித்து எந்த வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
சில தினங்கள் முன்பு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் நம்பிக்கையுடன் இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விடும் என்று தெரிவித்துள்ளது இதில் குறிப்பிடத்தக்கது.