2 பேர் காயம் - பதிரனாவும் ஸ்ரீலங்கா போய்ட்டாரு!! பின்தங்கும் CSK !! Play off தகுதி பெறுமா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்து வரவிற்கும் 4 போட்டிகளும் மிகவும் முக்கியமானவையாகும். சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், இது வரை 10 போட்டிகளில் விளையாடி 5'இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் சென்னை அணிக்கு பெரும் Play off சுற்று பெரும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது. அடுத்த 4 போட்டிகளில் சென்னை அணி ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
இதில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டமே சென்னையில் நடக்கிறது. மற்ற 3 போட்டிகள் வெளிஊரில் நடக்கிறது. சென்னை அணியின் அடுத்த சுற்றுவாய்ப்பு பெரும் சவாலான ஒன்றாக மாறியிருக்கும் நிலையில், அணிக்கு சிறப்பாக செயல்பட்டு வந்த முஸ்தபிசுர் ரகுமான் பங்களாதேஷ் அணிக்கு திரும்பியுள்ளார்.
இதுவே பெரும் சிக்கலாக ,மாறியுள்ள நிலையில், தீபக் சாஹர் காயமடைந்திருக்கிறார். அதே நேரத்தில், தற்போது முக்கிய வீரர்களாக கருதப்படும் பதிரனா மற்றும் தீக்ஷனா ஆகியோர் தங்கள் நாட்டிற்கு திரும்ப இருக்கிறார்கள். கிட்டத்தட்ட சென்னை அணியின் வேகப்பந்துவீச்சே பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
நெருக்கடியான போட்டிகளில் இனி சென்னை அணி விளையாடாவிற்கும் நிலையில், இந்த சவால்களை சந்தித்து எப்படி வெற்றி வாய்ப்பை பெரும் என்பது கேள்விக்குரியான ஒன்றே.