CSK Play-off வாய்ப்பு எப்படி இருக்கிறது - மண் அள்ளி போடும் SRH?? சவாலை தாண்டி முன்னேறுமா CSK
நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
சன்ரைசர்ஸ் வெற்றி
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 201/3 ரன்களை குவித்தது.அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 76(42), டிராவிஸ் ஹெட் 58(44) ரன்களை எடுத்தனர். பின்னர் 202 ரன்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு முதல் ஓவரிலேயே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவர்லேயே பட்லர் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் ரன் இன்றி அவுட்டாகினர். பின்னர், கைகோர்த்த ஜெய்ஸ்வால் மற்றும் பராக் பெரிய பார்ட்னெர்ஷிப்பை அமைத்தனர்.
ஜெய்ஸ்வால் 67(40), பராக் 77(40) எடுத்து அவுட்டான நிலையில், ராஜஸ்தான் அணி கடைசி ஓவர்களில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி புள்ளிபட்டியலில் 10 போட்டிகளில் 6 வெற்றியுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இது சென்னை அணிக்கு சிக்கலாக மாறியுள்ளது. முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான், கிட்டத்தட்ட அடுத்து சுற்று வாய்ப்பை உறுதிசெய்துவிட்டது. 2,3 ,மற்றும் 4-வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா, லக்னோ, ஹைதராபாத் அணிகள் தலா 6 வெற்றி பெற்றுள்ளன.
சென்னைக்கு சிக்கல்
இதில், கொல்கத்தா அணிக்கு இன்னும் 5 போட்டிகள் மீதமுள்ளது. அந்த அணி அதில் 2 வெற்றி பெற்றாலே அணியின் play off வாய்ப்பு உறுதியாகி விடும். லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகள் 4 போட்டியில் 2'இல் வெற்றி பெற்றாலே அந்த அணிகள் 16 புள்ளிகள் பெற்றுவிடும். 5-வது இடத்தில் இருக்கும் சென்னை அணிக்கு இன்னும் 4 போட்டிகள் உள்ளது.
அதில், நிச்சயமாக 3 வெற்றிகளை சென்னை அணி பெற்றாலும், 16 புள்ளிகள் பெரும். அப்போதும் ரன் ரேட் பிரச்சனை சென்னை அணிக்கு இருக்கும். 4'இல் 4 போட்டியும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணியின் வாய்ப்பு மிகவும் பிரகாசமாகும். சென்னை அணி அடுத்து மீண்டும் பஞ்சாப் அணியை பஞ்சாப்பிலும், குஜராத் அணியை குஜராத்திலும், ராஜஸ்தான் அணியை சென்னையிலும், பெங்களூரு அணியை பெங்களூருவிலும் எதிர்கொள்கிறது. சென்னை அணி பாரம்பரியமாக உள்ளூர் போட்டிகளில் தான் பெரும் ஆதிக்கம் செலுத்தியது.
அந்த இம்முறை சற்று சொதப்பலாக மாறியுள்ளது. அடுத்த 4 போட்டிகள் சென்னை அணிக்கு மிகவும் முக்கியமானதாகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
நேற்று பெற்ற வெற்றியின் மூலம் அதனை ஹைதரபாத் அணி இன்னும் சிக்கலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.