விஜய்யுடன் கூட்டணி அமைக்குமா காங்கிரஸ் ? செல்வப்பெருந்தகை சொன்ன பதில்!

Vijay Indian National Congress Tamil nadu Salem Thamizhaga Vetri Kazhagam
By Swetha Nov 06, 2024 02:07 AM GMT
Report

தவெகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார்.

விஜய்

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

விஜய்யுடன் கூட்டணி அமைக்குமா காங்கிரஸ் ? செல்வப்பெருந்தகை சொன்ன பதில்! | Will Congress Alliance With Tvk Selvaperunthagai

மாநாட்டில் விஜய்யின் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை விஜய் வகுத்து வருகிறார்.

அத்துடன், 2026ல் ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றும் தெரிவித்து இருந்தார். அதாவது, திமுக கூட்டணிக் கட்சிகளை தன் பக்கம் இழுக்கும் வகையில் அவருடைய பேச்சு இருந்தது.

டிவி சேனல் தொடங்குகிறாரா தவெக தலைவர் விஜய்? பெயர் என்ன தெரியுமா?

டிவி சேனல் தொடங்குகிறாரா தவெக தலைவர் விஜய்? பெயர் என்ன தெரியுமா?

செல்வப்பெருந்தகை 

இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “திமுகவும் காங்கிரஸும் மிகவும் இணக்கமாக இருக்கிறது. எங்கள் கூட்டணி வலிமையாக இருக்கிறது.

விஜய்யுடன் கூட்டணி அமைக்குமா காங்கிரஸ் ? செல்வப்பெருந்தகை சொன்ன பதில்! | Will Congress Alliance With Tvk Selvaperunthagai

திமுக - காங்கிரஸ் கூட்டணி எஃகு கோட்டை போன்றது. இந்தியா கூட்டணியை யாராலும் சிதைக்க முடியாது. மற்றவர்கள் கருத்து சொல்கிறார்கள் என்பதற்காக இந்தியா கூட்டணியில் பிளவு இருக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்று தெரிவித்தார்.

மேலும் , அவரிடம் நடிகர் விஜய் காமராஜரை முன்மாதிரியாக எடுத்து கட்சித் தொடங்கியுள்ளார். வரும் காலங்களில் அவருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு,

“காமராஜர் தேசியத்தின் சொத்து. அவரை யார் வேண்டுமானாலும் கொண்டாடலாம். ஆனால், காமராஜரை சொந்தம் கொண்டாடுகிற உரிமை காங்கிரஸுக்கு மட்டுமே உள்ளது” என்று பதிலளித்தார்.