இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி..! அடித்து கூறும் ஓபிஎஸ்..! இபிஎஸ் வந்த புது சிக்கல்

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Karthick Feb 05, 2024 02:31 PM GMT
Report

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் அணி இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடும் என ஓபிஎஸ் உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பு

மதுரை தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆலோசனை மேற்கொண்டார்.

will-compete-in-irattai-ilai-symbol-says-ops

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு படுதோல்வி அடையப்போகிறது என உறுதிபட தெரிவித்தார்.

will-compete-in-irattai-ilai-symbol-says-ops

அதிமுக கொடியை தான் பயன்படுத்தக் கூடாது என்றுதான் தீர்ப்பு வந்துள்ளதே தவிர தொண்டர்கள் பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பு வரவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், பாஜக கூட்டணியில்தான் தாங்கள் இருப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தினார்.

திடீர் சந்திப்பு - என்ன பேசினார்கள் சசிகலா - ஓபிஎஸ்..! வெளியான முக்கிய செய்தி..!

திடீர் சந்திப்பு - என்ன பேசினார்கள் சசிகலா - ஓபிஎஸ்..! வெளியான முக்கிய செய்தி..!

10 ஆண்டுகாலமாக சிறப்பான ஆட்சியை பிரதமர் மோடி மக்களுக்கு தந்துள்ளார் என புகழாரம் சுட்டிய ஓபிஎஸ், மீண்டும் பிரதமராக மோடி வர செயல்படுவோம் என்று தெரிவித்தார்.

will-compete-in-irattai-ilai-symbol-says-ops

மேலும்,வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்குதான் இரட்டை இலை சின்னம் வழங்கப்படும் என நம்பிக்கையுடன் கூறி, நாங்கள்தான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கூறினார்.