திடீர் சந்திப்பு - என்ன பேசினார்கள் சசிகலா - ஓபிஎஸ்..! வெளியான முக்கிய செய்தி..!
இன்று முன்னாள் முதல்வர் அண்ணாவிற்கு மரியாதை செய்ய வந்த போது சசிகலா மற்றும் ஓபிஎஸ் சந்தித்துக்கொண்டுள்ளனர்.
சந்திப்பு
அதிமுகவில் இருந்து வெளியேற்றபிறகும் கட்சியை தொண்டர்களின் உதவியால் மீட்பேன் என்று கூறும் ஓபிஎஸ் மற்றும் தனித்தனி பிரிவுகளாக இருக்கும் அதிமுகவினர் மீண்டும் ஒன்றிணைப்பேன் என தனி பாதைகளில் முறையே ஓபிஎஸ் மற்றும் சசிகலா பயணித்து வருகின்றார்.
இந்நிலையில், இன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் இருவரும் மரியாதை செலுத்த வந்தனர்.
பரஸ்பரம்
ஒரே நேரத்தில் இருவருமே வந்த நிலையில், சசிகலா வருவதை கவனித்த ஓ.பன்னீர்செல்வம், காரில் இருந்து இறங்கிச் சென்று, சசிகலாவை சந்தித்து பேசினார். பின்னர் சசிகலாவும் காரில் இருந்து இறங்கி ஓபிஎஸ்'ஸிடம் நலம் விசாரித்த நிலையில், இருவரும் சில நிமிடங்கள் பேசினார்.
தமிழக அரசியல் வட்டாரத்தில் இது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவரும் சந்தித்துக்கொண்டதும் , நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி குறித்து ஏதேனும் பேசப்பட்டிருக்குமா..? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.