Sunday, May 11, 2025

அதிமுக மோதல் திமுகவிற்கு சாதகமில்லை; ஓபிஎஸ் என்னை சந்திப்பார் - சசிகலா திட்டவட்டம்

AIADMK V. K. Sasikala Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Sumathi 2 years ago
Report

ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் திமுகவுக்கு சாதகமாக அமையாது என சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.

சட்டசபை மோதல்

சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அதிமுக சார்பாக பேசியதால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தது. 

அதிமுக மோதல் திமுகவிற்கு சாதகமில்லை; ஓபிஎஸ் என்னை சந்திப்பார் - சசிகலா திட்டவட்டம் | Sasikala Reaction About Aiadmk Clash In Assembly

இந்நிலையில், திருவாரூரில் நடைபெற்ற உறவினரின் இல்ல நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட சசிகலா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரையும் ஒன்றிணைத்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

சசிகலா கருத்து 

சட்டசபையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதலால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு சாதகம் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் உங்களை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நிச்சயம் இருக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், அதிமுகவினர் பிரிந்திருந்ததே இடைத்தேர்தல் தோல்விக்கான முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.