அதிமுக படுதோல்வி: அதை கண்டிப்பாக செய்து முடிப்பேன் - சசிகலா உறுதி

Tamil nadu AIADMK V. K. Sasikala Erode
By Sumathi Mar 03, 2023 04:45 AM GMT
Report

அதிமுக தோல்வியடைந்ததை தொடர்ந்து, சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதிமுக தோல்வி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தக் வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

அதிமுக படுதோல்வி: அதை கண்டிப்பாக செய்து முடிப்பேன் - சசிகலா உறுதி | Sasikala About Aiadmk Defeat Erode By Election

இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 66,575. இந்நிலையில் இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற கதையாக அதிமுக இன்று இருக்கும் நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு திமுக அதில் குளிர்காய்வதால் பெற்ற வெற்றியாகத்தான் பார்க்க முடிகிறது.

சசிகலா

பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒன்றாக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டு மக்களும் இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக இந்த இடைத்தேர்தலை சந்தித்து இருந்தால் கழகம் இன்றைக்கு வெற்றி பெற்று இருக்கும்.

எனவே, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்துக்கிணங்க ஒட்டுமொத்த கழக தொண்டர்கள் எதிர்பார்க்கின்ற ஒரு வலிமையான, ஒருங்கிணைந்த அதிமுகவை அமைத்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம். தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு நம் தலைவர்கள் கொடுத்த அதே பொற்கால ஆட்சியை விரைவில் அமைப்போம்.

இது உறுதி. எனவே அதிமுக தொண்டர்கள் அனைவரும் இந்த தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல், நம்பிக்கையோடு இருங்கள். விரைவில் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்படும். நான் அதை கண்டிப்பாக செய்து முடிப்பேன். நாளை நமதே " எனத் தெரிவித்துள்ளார்.