டிடிவி தினகரன் மகள் திருமணம்- சசிகலா நேரில் வாழ்த்து
டிடிவி தினகரன் மகள் திருமண திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்த சசிகலாவுக்கு தொண்டர்கள் ஆரவார வரவேற்பு அளித்தனர்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும் தஞ்சாவூர் முன்னாள் காங்கிரஸ் எம்பி துளசி வாண்டையார் பேரன் ராமநாதன் துளசி வாண்டையாருக்கும் இன்று திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழா சசிகலா தலைமையில் நடைபெற்றது.
நேற்று இரவு பெண் அழைப்பு நிகழ்வு நடைபெற்றது. அண்ணா நுழைவு வாயிலில் இருந்து தனியார் தங்கும் விடுதியில் இருந்து வேங்கிக்கால் பகுதியில் இருக்கும் திருமண மண்டபத்திற்கு மேளதாளங்கள் முழங்க, குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக பெண் அழைப்பு நடைபெற்றது.
அண்ணா நுழைவுவாயிலில் முதல் வேங்கிக்கால் திருமண மண்டபம் வரைக்கும் சாலையின் இருபுறமும் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இதன் பின்னர் திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் திருமணம் நடத்துவதற்காக அனுமதி பெற்றிருந்த நிலையில்
இன்று அண்ணாமலையார் திருக்கோவில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற இருப்பதாலும் திருமணத்திற்கு அதிக அளவில் கட்சி பிரமுகர்களும் உறவினர்களும் வருகை தருவார்கள் என்பதாலும் திருமண நிகழ்வுகள் அனைத்தும் திருமண மண்டபத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டு விட்டன. திருமணம் முடிந்ததும் மணமக்கள் அண்ணாமலையார் திருக்கோயிலில் தரிசனம் செய்தனர்.