மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்ததுமே - மேகதாது அணை - கர்நாடக துணை முதல்வர் உறுதி
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக காங்கிரஸ் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியில், திமுக - காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உத்தவ் தாகூர், ஆம் ஆத்மீ, இடதுசாரிகள் போன்ற கட்சிகள் உள்ளன.
ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் பல வேறுபாடுகள் இருக்கும் நிலையிலும், பாஜகவை வீழ்த்திடவேண்டும் என்ற ஒற்றை நோக்கில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டிற்கும், கர்நாடகா மாநிலத்திற்கும் பல ஆண்டுகளாக காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் பெரும் பிரச்சனையாகவே இருக்கின்றது.
கூட்டணி என்ற போதிலும் மாநில உரிமைக்காக இரு கட்சிகளும் இதில் முரணான போக்கை கையாளுகின்றன. அப்படி தான் தற்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது காவிரியில் மேகதாது தடுப்பணை கட்டப்படும் என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதனை அக்கட்சி மாநில சட்டமன்ற தேர்தலின் வாக்குறுதியாகவும் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திமுக - காங்கிரஸ் கூட்டணி மிகவும் வலுவாகவே இருக்கும் நிலையில், மத்தியில் ஆட்சி அமைந்தால் எவ்வாறு மத்திய காங்கிரஸ் இப்படி ஒரு சிக்கலான பிரச்னையை கையாளும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.