விஜய் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி? முடிவு செய்யப்படும்..எல்.முருகன் விளக்கம்!
Vijay
Tamil nadu
BJP
By Swetha
விஜய் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா என்று எல்.முருகன் விளக்கமளித்துள்ளார்.
எல்.முருகன்
திருப்பூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் மக்கள் கிராமங்கள் , நகரங்கள் என ஒவ்வொரு தெரு முனையிலும் விநாயகரை வழிபடுகின்றனர்.
கூட்டணி
தமிழகம் ஆன்மீக பூமி; இங்கு போலி திராவிடத்திற்கு இடமில்லை. என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் தற்போது தான் கட்சி தொடங்கி உள்ளார். இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் விஜய் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்குமா என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். என்று பேசியுள்ளார்.