என்னிடம் அண்ணாமலை பற்றி தேவையில்லாமல் கேட்காதீங்க..கடுப்பான எல்.முருகன்!
அண்ணாமலை குறித்த கேள்விகள் எண்ணிடம் கேட்க வேண்டாம் என எல்.முருகன் கூறியுள்ளார்.
எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”தமிழ்நாட்டில் பாஜக மிகச் சிறப்பாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மாநில தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டு இருப்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். வயநாட்டில் பிரியங்கா காந்தி களமிறங்குவது எதிர்பார்த்த ஒன்று தான். தங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவரை தவிர, வேறு யாருக்கும் வாய்ப்பு தரக்கூடாது என்பதில் காங்கிரஸ் திட்டவட்டமாக உள்ளதால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறினார்.
இதன் பிறகு செய்தியாளர் ஒருவர், பாஜக மாநில தலைவராக அண்ணாமலை உட்பட யார் வந்தாலும் மீண்டும் கூட்டணி இல்லை என அதிமுக கூறியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், மாநில தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்படுகிறார்.
அண்ணாமலை
அவரைப் பற்றி தேவையில்லாமல் கேட்காதீர்கள். ஒரு கட்சியின் உட்கட்சி விஷயத்தில் மற்றொரு கட்சி தலையிட முடியாது” என்றார்.மேலும், ”வந்தே பாரத் ரயிலையும் ரயில்வே துறை தான் இயக்கி வருகிறது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் ரயில்வே அமைச்சராக பதவி வகித்துள்ளார். ரயில்வேயில் விபத்துகள் தவிர்க்க முடியாத ஒன்று.
எதிர்பாராமல் நடக்கக்கூடியது. விபத்து நடந்த பகுதிக்கு மத்திய அமைச்சர் உடனடியாக நேரில் சென்று நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்” என பேசினார். மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அமைச்சர் சோமண்ணா கூறியுள்ள கருத்துக்கள் குறித்து நிபுணர் ஒருவர் கேள்வி கேட்டனர்.
அப்போது, அமைச்சர் என்ன பேசி இருக்கிறார் என எனக்கு தெரியாது. அவர் என்ன பேசி இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட பின்னர் அதற்கு பதில் அளிக்கிறேன்” என்று கூறிவிட்டு எல்.முருகன் புறப்பட்டு சென்றார்.