இனி தவறான தகவல்களை பரப்பும் ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை - எல்.முருகன் தீவிரம்!
தவறான செய்திகளை பரப்பும் உடன்கண்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எல்.முருகன் எச்சரித்துள்ளார்.
ஊடகங்கள்
முன்னதாக தமிழிசை ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சமீபகாலமாக பாஜகவில் சமூகத்திற்கு விரோதமாக இருப்பவர்கள் இருப்பதாகவும் கூறி, நேரடியாக விமர்சனத்தையும் வைத்தார். இது நேரடியாக மாநில தலைமையை எதிர்த்து பேசியதாகவே சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகின.
அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான திருச்சி சூர்யா தமிழிசையை விமர்சிக்கும் வகையில் பதிவு ஒன்றையும் வெளியிட்டார். வெளிச்சத்திற்கு கட்சியின் மோதல் வந்துவிட்டதாக செய்திகளில் எழுதப்பட்டது. இந்த நிலையில் தான், மோதல் தொடர்பாக கட்சி மேலிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகின.
அதே சமயத்தில் ஆந்திராவில் 4வது முறையாக முதலைச்சராகும் சந்திர பாபுவின் பதிவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது மேடையில், அமித்ஷா தமிழிசை அழைத்தது கண்டித்தது போன்ற வீடியோ படு வைரலானது. இதற்கு அமித்ஷா தரப்பிலிருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தமிழிசை தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டது.
எல்.முருகன்
அதில், “நான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 2024 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக ஆந்திராவில் சந்தித்தேன். அப்போது அவர் தேர்தலுக்கு பிந்தைய சூழல், களத்தில் உள்ள சவால்கள் பற்றி என்னிடம் கேட்டார். மேலும், அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளைக் கவனிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்தச் சந்திப்பு தொடர்பான தேவையற்ற யூகங்களுக்கு விளக்கம் அளிக்கவே இதைப் பதிவிட்டுள்ளேன்” என்று கூறினார். ஆனாலும், நெட்டிசன்கள் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து பல்வேறு மாற்று கருத்துக்களை கூறி வருகின்றனர். இது தொடர்பாக செய்தி சேனல்களிலும் விவாதங்கள் எழுந்தன.
இந்த பின்னணியில்தான் மத்திய இணையமைச்சர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எல்.முருகன், “தூர்தர்ஷன் என்றால் அதிகாரப்பூர்வமான செய்தி என்கிற நம்பிக்கை இருக்கிறது.
அதேபோல மற்ற செய்தி ஊடகங்களும் இருக்க வேண்டும். பிரேகிங் செய்திக்காக தவறான செய்தியை பரப்ப வேண்டாம். அப்படி பரப்பப்படும் செய்தி ஊடகங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.