முடிவிற்கு வந்த பஞ்சாயத்து! தமிழிசை சௌந்தர்ராஜனை வீடு தேடி சென்று சந்தித்த அண்ணாமலை
தமிழக பாஜகவில் கடந்த சில நாட்களாக உட்கட்சி பூசல் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி கொண்டே இருந்தன.
தமிழிசை
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநராக இருந்த தமிழிசை, அப்பதவியை ராஜினாமா செய்து, மக்களவை தேர்தலை தென் சென்னையில் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் அவருக்கு சாதகமாக அமையவில்லை.
2,90,683 வாக்குகளை பெற்றவர், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை விட 2,25,945 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார். தோல்வி பெரிய வகையில் சலசலப்புகளை ஏற்படுத்தவில்லை என்றாலும், தேர்தலுக்கு பிறகு தமிழிசை அளித்த பேட்டி பெரும் வைரலாகின.
பஞ்சாயத்து
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சமீபகாலமாக பாஜகவில் சமூகத்திற்கு விரோதமாக இருப்பவர்கள் இருப்பதாகவும் கூறி, நேரடியாக விமர்சனத்தையும் வைத்தார். இது நேரடியாக மாநில தலைமையை எதிர்த்து பேசியதாகவே சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகின.
அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான திருச்சி சூர்யா தமிழிசையை விமர்சிக்கும் வகையில் பதிவு ஒன்றையும் வெளியிட்டார். வெளிச்சத்திற்கு கட்சியின் மோதல் வந்துவிட்டதாக செய்திகளில் எழுதப்பட்டது. இந்த நிலையில் தான், மோதல் தொடர்பாக கட்சி மேலிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகின.
அதே நேரத்தில் ஆந்திர மாநில முதல்வர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட போது, அமித் ஷா எதோ ஒன்று தமிழிசையிடம் பேச தேய்ச்ய தலைப்பு செய்தியாகவே இது மாறியது.
அண்ணாமலை vs தமிழிசை என கட்சி செல்வதாக கருத்துக்கள் எழுதப்பட்ட நிலையில், அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று தமிழிசையை அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளார் அண்ணாமலை.