நீண்ட தூரம் ஓடவும் தாண்டவும் திராவிட மாடல் அரசு துணை நிற்கும் - உதயநிதி உறுதி..!

Udhayanidhi Stalin M K Stalin Tamil nadu DMK
By Karthick Feb 23, 2024 09:08 PM GMT
Report

விளையாட்டு வீரர்களுக்கு என்றும் திராவிட மாடல் அரசு உறுதுணையாக இருக்கும் என தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி பதிவு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் நம் வீரர் – வீராங்கனையரை அங்கீகரிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பில் தொடர்ந்து உயரிய ஊக்கத்தொகை வழங்கி வருகிறோம்.

will-be-supportive-for-sports-players-udhay

அந்த வகையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற தேசிய & பன்னாட்டு அளவிலானப் போட்டிகளில் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித் தந்த, 609 வீரர் - வீராங்கனையர் - மாற்றுத்திறனுடைய வீரர் - வீராங்கனையருக்கு கழக அரசு சார்பில் ரூ.16.24 கோடியை உயரிய ஊக்கத் தொகையாக சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் இன்று வழங்கினோம்.

அமைச்சர் உதயநிதி மகனின் பரபர ஃபோட்டோஸ் - கொதித்தெழுந்த பிரபலம்!

அமைச்சர் உதயநிதி மகனின் பரபர ஃபோட்டோஸ் - கொதித்தெழுந்த பிரபலம்!

உறுதுணையாக...

மேலும், பல்வேறு போட்டிகளில் சாதனைகளைப் படைத்து வரும் வீரர் - வீராங்கனையர் 4 பேருக்கு விளையாட்டு வீரர்களுக்கான 3 % இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினோம்.

'நீண்ட தூரம் ஓடினால் தான், அதிக உயரம் தாண்ட முடியும்' என்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வாக்குப்படி, நம் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர் - வீராங்கனையர் நீண்ட தூரம் ஓடவும் - அதிக உயரம் தாண்டவும், நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என பதிவிட்டுள்ளார்.