அமைச்சர் உதயநிதி மகனின் பரபர ஃபோட்டோஸ் - கொதித்தெழுந்த பிரபலம்!

Udhayanidhi Stalin Viral Photos
By Sumathi Jan 05, 2023 05:13 AM GMT
Report

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியின் புகைப்படத்தை விமர்சித்த பாஜகவிற்கு காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.

இன்பநிதி

அண்மையில், திமுக எம்எல்ஏ-வாக பதவி வகித்து வந்த உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதில் அவரது மகன் இன்பநிதி ஸ்பெயினில் இருக்கும் இன்பநிதி, வீடியோ கால் மூலம் அமைச்சரான உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அமைச்சர் உதயநிதி மகனின் பரபர ஃபோட்டோஸ் - கொதித்தெழுந்த பிரபலம்! | Udayanidhi Stalin Son Inbanithi Viral Photos

அதனைத் தொடர்ந்து பல சலசலப்புகள் எழுந்த வண்ணம் இருந்தன. அதன் வரிசையில் அமைச்சர் கே.என்.நேரு, உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் வந்தாலும் வாழ்க என்று சொல்லுவோம். வாரிசு அரசியல் என்று கூறியெல்லாம் எங்களை மிரட்டிவிட முடியாது.

காயத்ரி ரகுராம் சாடல்

திமுக கழகத் தொண்டர்கள் எப்போதும் நன்றியுடன் இருப்பவர்கள் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது இன்பநிதி ஒரு மாடல் அழகியுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும் பல புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், தற்போது அண்ணாமலை டீம் உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை கசியவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்துகிறது. பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் அண்ணாமலை தலைமையில்? அடல்ட் வீடியோ ஆடியோ போட்டோ புகழ் அண்ணாமலை என சாடியுள்ளார்.