பதவியேற்ற மகிழ்ச்சியில் மனைவியை கட்டிபிடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

Udhayanidhi Stalin M K Stalin Government of Tamil Nadu Kiruthiga Udhayanidhi
By Thahir Dec 14, 2022 07:47 AM GMT
Report

ஆளுநர் மாளிகையில் இன்று காலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார்.

இனி மாண்புமிகு உதயநிதி 

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவருக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று மற்ற அமைச்சர்கள் முதலமைச்சரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து அவருக்கு அமைச்சர் பதவி அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர் அமைச்சர் பதவியை இன்று முறைப்படி ஏற்றுக் கொண்டார் அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

Minister Udayanidhi Stalin hugging his wife

இதையடுத்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

மனைவியை கட்டியணைத்து மகிழ்ச்சி 

பின்னர் நிகழ்ச்சி முடிந்து மேடையில் இருந்து கீழே வந்த உதயநிதி தனது தாய் துர்கா ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

தனது அருகில் நின்ற தனது மனைவி கிருத்திகாவை கட்டியணைத்த படி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருக்கு உதயநிதி மகள் தன்மயா கட்டியணைத்து மகிழ்ச்சி பொங்க வாழ்த்து தெரிவித்தார்.

Minister Udayanidhi Stalin hugging his wife

இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தயாநிதி அழகிரி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.