மது ஒழிப்பு மாநாடு; திருமாவளவன் அழைப்பு..பங்கேற்குமா அதிமுக? ஜெயக்குமார் பதில்!

Thol. Thirumavalavan Tamil nadu ADMK D. Jayakumar
By Swetha Sep 16, 2024 02:30 AM GMT
Report

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா என்பது குறித்து ஜெயக்குமார் பேசியுள்ளார்.

ஜெயக்குமார் 

சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தப்போது இது தொடர்பாக பேசியதாவது, வி.சி.க. தலைவர் திருமாவளவன் பொதுநல நோக்கத்தோடு மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறோம் என்று சொல்லி இருக்கிறார்.

மது ஒழிப்பு மாநாடு; திருமாவளவன் அழைப்பு..பங்கேற்குமா அதிமுக? ஜெயக்குமார் பதில்! | Will Admk Joins Vcks Conference Jayakumar Answers

இது வரவேற்கத்தக்கது. ஆனால் அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய இயக்கம். எனவே எங்கள் கட்சிக்கு என்று ஒரு வரைமுறை இருக்கிறது. எனவே நேரில் சந்தித்து, இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தால் அதுபற்றி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.

வி.சி.க. மது ஒழிப்பு மாநாட்டில் த.வெ.க பங்கேற்பு?வெளியான தகவல்!

வி.சி.க. மது ஒழிப்பு மாநாட்டில் த.வெ.க பங்கேற்பு?வெளியான தகவல்!

மாநாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான், தற்போது அமெரிக்கா சென்று வந்திருக்கிறார். இந்த பயணத்தால் என்ன தாக்கம்? எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின?

மது ஒழிப்பு மாநாடு; திருமாவளவன் அழைப்பு..பங்கேற்குமா அதிமுக? ஜெயக்குமார் பதில்! | Will Admk Joins Vcks Conference Jayakumar Answers

இதனால் எத்தனை நிறுவனங்கள் செயலாக்கம் பெற்றுள்ளன? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.