மகன் வயது இளைஞருடன் தகாத உறவு - மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்!
தகாத உறவில் இருந்த மனைவியை, கணவன் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
உத்தரப்பிரதேசம், ராஜ்காட் பகுதியில் உள்ள குர்ராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷரத்சந்திரபால். இவர் தனது மனைவி நீலம் என்பவரைக் கொலை செய்து விட்டதாக காவல் நிலையத்தில் சரணடைந்தார். அதன் அடிப்படையில் போலீஸார்,
அவரது வீட்டிற்குச் சென்று பார்த்த போது கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் நீலம் கிடந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஷரத்திடம் விசாரித்த போது அதிர்ச்சியான சம்பவங்கள் வெளியாகின.
அதிர்ச்சி தகவல்
கொலையாளி கூறுகையில், " எனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. எனது மனைவி நீலம், தன்னை விட 25 வயது குறைவான மகன் வயது உள்ள அந்த நபருடன் நீலம் தொடர்பு வைத்திருந்தார்.
அந்த தகாத உறவைத் துண்டிக்கும்படி மனைவியிடம் பலமுறை சண்டைபோட்டும் அவர் கேட்கவில்லை. இதனால், அவளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டேன்" என்று கதறி அழுதார். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.