கணவர் ஆண்மையில்லாதவர்; மனைவி குற்றச்சாட்டு - நீதிமன்றம் முக்கிய கருத்து

Mumbai Divorce
By Sumathi Aug 02, 2025 09:54 AM GMT
Report

கணவர் ஆண்மையில்லாதவர் என மனைவி கூறுவது அவதூறு ஆகாது என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மனைவி குற்றச்சாட்டு 

மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்தவருக்கும், சத்தீஷ்கார் மாநிலம் ராய்பூரை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர்.

கணவர் ஆண்மையில்லாதவர்; மனைவி குற்றச்சாட்டு - நீதிமன்றம் முக்கிய கருத்து | Wifes Claim Husband Impotent Defend Mumbai Court

மேலும், விவாகரத்து வழக்கில் மனைவி பலகணவரை ஆண்மையில்லாதவர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்நிலையில் மனுக்களில் தன்னை ஆண்மையில்லாதவர் என கூறி அவதூறு பரப்பியதாக கணவர் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த செசன்ஸ் நீதிமன்றம் கணவரின் புகார் குறித்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனைவி தரப்பில் மும்பை நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர் - மனைவி உடந்தை?

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர் - மனைவி உடந்தை?

நீதிமன்றம் கருத்து

இதுதொடர்பான விசாரணை நீதிபதி எஸ்.எம். மோதக் அமர்வு முன் நடந்தது. அப்போது "திருமணத்தில் ஒரு பெண் எப்படி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை நியாயப்படுத்த இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.

divorce

விவாகரத்து தொடர்பான வழக்கில் ஆண்மை தொடர்பாக கூறுவது அவசியமானது. தம்பதிக்கு திருமண உறவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

எனவே மனைவி அவரது நலன்கருதி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவது நியாயமானது தான். அதை அவதூறு என கூறமுடியாது" என்று கூறி முன்னாள் கணவரின் மனுவை தள்ளுபடி செய்தார்.