வகுப்பறையில் பாடல் கேட்டவாறு ஆயில் மசாஜ்; ஆசிரியை அட்ராசிட்டி - வீடியோ வைரல்!

Viral Video Uttar Pradesh
By Sumathi Jul 30, 2025 08:09 AM GMT
Report

அரசுப்பள்ளியில் ஆசிரியை பொறுப்பற்று நடந்துக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ஆசிரியை செயல்

உத்தரபிரதேசம், புலந்த்ஷஹர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

uttar pradesh

இங்கு ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பழைய பாலிவுட் பாடலை மொபைலில் ஒலிக்கச் செய்து கொண்டே தலைமுடிக்கு எண்ணெய் தேய்க்கும் சம்பவம் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில், ஆசிரியை ஒரு நாற்காலியில் அமர்ந்து, தனது தலைமுடியில் மசாஜ் செய்கிறார். தனது டேபிளில் மொபைலில் 'அமர் பிரேம்' படத்தின் 'Bada Natkhat Hai Yeh' பாடலின் வீடியோவை வைத்து, தானும் அந்த பாடலை சற்று சத்தமாக பாடுகிறார்.

HIV பாதித்த சகோதரன்; குடும்ப பெருமைக்கு களங்கமாம்.. சகோதரி செய்த செயல்!

HIV பாதித்த சகோதரன்; குடும்ப பெருமைக்கு களங்கமாம்.. சகோதரி செய்த செயல்!

ஷாக் வீடியோ

மேலும் தனது மொபைலை ப்ளூடூத் ஸ்பீக்கரில் கனெக்ட் செய்து சத்தமாக பாடலை ஒலிக்கச் செய்துள்ளார். எதிரே உட்கார்ந்திருக்கும் மாணவர்கள் கல்வி சார்ந்த எந்த நடவடிக்கையிலும் ஈடுபாடாமல், அமைதியாக அமர்ந்து இதனை பார்த்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்த வீடியோ பெரும் கண்டனங்களை பெற்ற நிலையில், குறிப்பிட்ட அந்த ஆசிரியை உடனடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி லட்சுமிகாந்த் பாண்டே தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.